தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிவஞான புரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். மாற்றுத்திறனாளியான இவர், அதே ஊரில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி செய்ய அரசு ஆணை வழங்கியிருந்தது. இதைக்கொண்டு பணியில் சேர சென்ற நாகராஜனை கடையின் மேற்பார்வையாளர் ஐயப்பன் என்பவர், மாற்றுத்திறனளியால் எந்த வேலையும் செய்யமுடியாது என இழிவாக பேசி, கடந்த ஒரு வருடங்களாக பணி செய்யவிடாமல் தடுத்தது தெரியவந்தது.
இதனால், மன வேதனையடைந்த நாகராஜன்,. மாவட்ட மேலாளர், மாவட்ட உதவி மேலாளருக்கு தபால் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் புகார் தெரிவித்துள்ளார். இருப்பினும் புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.