தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை - அனிதா ராதாகிருஷ்ணன் - தூத்துக்குடி செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Kandasashti festival  Kandasashti  online telecast  tiruchendur murugan temple  anitha radhakrishnan  கந்தசஷ்டி விழா  அனிதா ராதாகிருஷ்ணன்  கந்தசஷ்டி விழா குறித்து அனிதா ராதாகிருஷ்ணன்  தூத்துக்குடி செய்திகள்  மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்
அனிதா ராதாகிருஷ்ணன்

By

Published : Oct 28, 2021, 11:29 AM IST

தூத்துக்குடி:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டமானது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (அக்டோபர் 27) நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் கந்தசஷ்டி விழா தொடர்பாக அனைத்து துறை சார்பில் செய்யப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

சமூக வலைதளத்தில் ஒளிபரப்பு

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கந்தசஷ்டி விழா குறித்து அனிதா ராதாகிருஷ்ணன்

இதில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில், கரோனா விதிமுறை அமல் காரணமாக பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்னதானம்

இது தவிர திருவிழாவின் மற்ற நாள்களில் தினமும் 10 ஆயிரம் பேர் கூட்ட நெரிசல் இன்றி சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். மேலும் திருச்செந்தூர் கோயில் வளாகத்தை சுற்றி உள்ள தனியார் தங்கும் விடுதிகள், சுற்றுப் பிரகார மண்டபங்களில், கோயில் வளாகம் ஆகியவற்றில் பேக்கேஜ் முறையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் போன்ற நாள்களை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படும். அதேவேளையில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தனியார் அமைப்பினர் அன்னதானம் வழங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு குடிநீர் தொட்டிகள் கழிப்பிட வசதிகள் அமைப்பதற்கு அந்தந்த துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

இதையும் படிங்க: போக்குவரத்து துறையில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன - ராஜகண்ணப்பன்

ABOUT THE AUTHOR

...view details