தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செவல்குளம் நீரோடையில் செண்பகவல்லி அம்மன் கோயில் பயன்பாட்டில் உள்ள 106 கடைகளும், தனியார் ஆக்கிரமிப்பில் 25 கடைகளும் கட்டப்பட்டிருந்தன. இதில் கடை உரிமையாளர்கள் ஓடை பகுதிகளையொட்டி கான்கிரீட் தூண்கள் எழுப்பி தங்களது வசதிக்கு ஏற்றவாறு, கடைகளை மாற்றி அமைத்துக் கொண்டதால், மழைக்காலங்களில் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடைகள் இருக்கும் பகுதிகளில் தேங்கும் கழிவு நீரும் மழைக்காலத்தில் வரும் தண்ணீரும் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கோவில்பட்டி நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு மீட்புக் குழுவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.