கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால், இச்சமயத்தில் மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.
ஊரடங்கு உத்தரவில் ஊருக்குள் உலாவிய புள்ளிமான் - சுற்றி வளைத்த தீயணைப்புத் துறை! - tuticorin fire department
தூத்துக்குடி: தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளிமானை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியாருத்துச் சொந்தமான இடத்தில் புள்ளிமான் ஒன்று உலாவுவதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், புள்ளி மானை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு புள்ளி மானை மீட்டனர். பின்னர், அந்தப் புள்ளி மானை குருமலை வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.
இதையும் படிங்க:வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!