தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று (ஏப்ரல் 16) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதிகள் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 55 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்களும் பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை மட்டும் 2,943 முழு உடல் பாதுகாப்பு கவச உடை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 2,772 என்.95. முகக் கவசங்கள் இருப்பு உள்ளன.