தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டியில் கந்துவட்டி கொடுமையால் கூலி தொழிலாளி தற்கொலை - கூலி தொழிலாளி தற்கொலை

தூத்துக்குடி: கோவில்பட்டியில் கந்துவட்டி கொடுமையினால் விரக்தியடைந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

coolie commits suicide after alleged usury torture
கூலி தொழிலாளி தற்கொலை

By

Published : Mar 24, 2021, 2:22 PM IST

கோவில்பட்டி பருத்தி குடோனில் கூலி வேலை செய்துவந்த சுரேஷ் (37), இன்று (மார்ச் 24) தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, கோவில்பட்டி டிஎஸ்பி கதிரவன், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தொடர்ந்து உயிரிழந்த சுரேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பசும்பொன் நகர் சண்முகதுரை, சங்கரலிங்கபுரம் மகாராஜன், காந்தி நகர் மனோகர் ஆகியோர் சுரேஷுக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததும், பணத்தை திருப்பித் தர சொல்லி சுரேஷுக்கு அழுத்தம் கொடுத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, மகாராஜன், மனோகர், ஆகிய இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தலைமறைவான சண்முகராஜாவை தேடி வருகின்றனர். உயிரிழந்த சுரேஷுக்கு சுதா (35) என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையும் உள்ளனர்.

இதையும் படிங்க:சிறுநீர் குடிக்குமாறு வற்புறுத்தி இளைஞரைத் தாக்கிய கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details