தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்புக் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் அக்கல்லூரியின் அருகேயுள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இந்த முதியோர் இல்லத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட முதியவர்களுடன் மாணவ - மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவம் குறித்த மாணவர்களின் நாடகமும், மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியும், சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.