தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்எல்ஏக்கள் ஒருவர் கூட தம்மை சந்தித்தது இல்லை - முதலமைச்சர்

தூத்துக்குடி: தற்போது உள்ள 88 திமுக எம்எல்ஏக்களில் ஒருவர் கூட தங்கள் தொகுதி பிரச்னைக்காக தன்னை சந்தித்து மனு அளித்ததில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

cm

By

Published : May 7, 2019, 11:25 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மினால் எம்.எம்.ஏ.மோகனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓட்டப்பிடாரம், புத்தியம்புத்தூர், தருவைகுளம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் முதலமைச்சரை சந்தித்து மக்கள் பிரச்னைக்கு மனு அளிக்கபோவதில்லை. இப்போது உள்ள 88 திமுக எம்எல்ஏக்களில் ஒருவர்கூட என்னை சந்தித்து மனு அளிக்கவில்லை. எனவே ஆளும்கட்சி வெற்றி பெற்றால் உங்களுக்கான பிரச்சனைகள் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டப்பிடாரத்தில் தண்ணீர் பிரச்சனையை போக்க தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் முடிவு பெற்று திறக்க காத்திருக்கிறது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி தரம் உயர்த்தி பேரூராட்சியாக அறிவிக்கப்படும். எதிர்கட்சியாக இருக்கும்போதே திமுகவினர் அராஜகம் செய்து வருகிறார்கள். இதில் ஸ்டாலின் முதலமைச்சரானால் நாடு தாங்குமா? ஏழைகளுக்கு திட்டங்களை தடுத்து நிறுத்தும் கட்சியாக திமுக உள்ளது.

எதை சொன்னாலும் மக்கள் கேட்டுகொள்வார்கள் என நினைத்து 25 வருடம் கழித்து ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என துரைமுருகன் கூறியுள்ளார். இந்தியாவிலேயே ஒரு தொகுதியில் மக்களவைத் தேர்தல் பணம் வினியோகத்தால் நிறுத்தப்பட்டது என்றால் அந்த பெருமை திமுகவையே சாரும். மீனவ மக்களுக்கு அதிமுக அரசு என்றுமே உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details