தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்குவாரி அமைக்கத் தடை கோரிய வழக்கு: தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

மதுரை: சாத்தான்குளம் அருகே கல்குவாரி அமைக்கத் தடை கோரிய வழக்கு தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

தூத்துக்குடி சாத்தான்குளம் கல்குவாரி
தூத்துக்குடி சாத்தான்குளம் கல்குவாரி

By

Published : Mar 22, 2021, 6:24 PM IST

Updated : Mar 22, 2021, 7:19 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னாசிமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனுவில்,

சாத்தான்குளம் கல்குவாரி

"தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான் குளம் கிராமத்தில் கல்குவாரி நடத்த சிலர் அனுமதி கோரியுள்ளனர். கல்குவாரி நடத்த அனுமதி கோரிய இடத்திற்கு அருகே சுடலை மாடசாமி கோயில் உள்ளது.

மேலும் சுமார் 50 மீட்டர் தூரத்தில் எவ்வித கட்டடம் இருக்கக் கூடாது என்பது அரசின் விதி. ஆனால் அரசு நிர்ணயித்த விதிகளை மீறி கல்குவாரி அமைக்க சிலர் விண்ணப்பித்துள்ளனர். இது சட்டவிரோதமானது. மேலும் அப்பகுதி முழுவதும் வேளாண்மை சார்ந்த பகுதி ஆகும். கல்குவாரி சுமார் 100 அடி ஆழத்திற்குத் தோண்டினால் வேளாண்மைக்குத் தண்ணீர்ப் பாசனம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

தற்போது சிலர் மீரான் குளம் கிராமத்தில் கல்குவாரி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். கல்குவாரி அமைக்கத் தடை கோரி, இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே சாத்தான்குளம் தாலுகா, மீரான் குளம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெற்ற பின்பே, குவாரி நடத்த அனுமதிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குத் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Last Updated : Mar 22, 2021, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details