தூத்துக்குடி: காந்தி ஜெயந்தி அன்று நடக்க வேண்டிய கிராம சபை கூட்டங்கள் தமிழ்நாடு அரசால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சாத்தான்குளம் அருகில் உள்ள இடைச்சிவிளை கிராமத்தில், கிராம சபை கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திமுக சார்பில் நடத்தப்பட்டது.
இதில், கிராம சபை கூட்டம் என வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை தட்டார்மடம் காவல்துறையினர் அகற்றினர். தொடர்ந்து நடந்த விழாவில் பங்கேற்ற, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இந்தக் கூட்டத்தில், திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நோய்த்தொற்று கால ஊரடங்கு உத்தரவை மீறி இடைச்சிவிளையில் கூட்டம் நடத்தியதாக, கனிமொழி எம்.பி, அனிதா அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேர் மீது தட்டார்மடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :கால்நடைகளிடம் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்