தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் திமுகவினர் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சியின்போது, அதிமுகவினரும் அதே பகுதியில் கொடியேற்ற முயன்றனர். இதனால் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.
கட்சிக்கொடி ஏற்றுவதில் மோதல்: திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 602 பேர் மீது வழக்குப்பதிவு - விளாத்திக்குளத்தில் திமுக அதிமுக மோதல்
தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் கட்சிக்கொடி ஏற்றுவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 602 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விளாத்திகுளம் ஆய்வாளர் பத்மநாப பிள்ளை விசாரணை நடத்திவருகிறார்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் காசிலிங்கம் அளித்த புகாரின்பேரில் திமுக எம்எல்ஏ கீதாஜீவன், முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் உள்பட 502 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவர் மீதும் சட்டம் ஒழுங்கு பொது அமைதியை சீர்குலைத்தல், கூட்டத்தை கூட்டி தொற்று நோயைப் பரப்புதல், கலகம் விளைவித்தல், தடையை மீறுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.