தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் கஞ்சிபுரம் கற்பக விநாயகா பல்மருத்துவக் கல்லூரி, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை அப்போலோ மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள அன்னம்மாள் கல்லூரியில் இன்று 2ஆவது நாளாக நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பார்வையிட்டு முகாமில் கலந்துகொண்டவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் விளைவித்து, ஜனநாயகத்திற்குபாஜகதுரோகம் செய்துள்ளது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றாலும் பாஜக தலைமையில் தான் அமைச்சரவை அமைய வேண்டும் என்ற மனநிலையில் மத்திய அரசு செயல்படுகிறது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற அநீதி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.