தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டியில் மாவீரன் பகத்சிங் ரத்ததான கழகம் சார்பில் பகத்சிங் 88 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பின் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பகத்சிங் நினைவு தினத்தினை முன்னிட்டு ரத்ததான முகாம்!
தூத்துகுடி: பகத்சிங் 88வது நினைவு தினத்தினை முன்னிட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முகாமிற்கு பகத்சிங் ரத்த தான கழக செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் ராஜபாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கமலவாசன் ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக இலுப்பையூரணி பார்வதி உயர்நிலைப்பள்ளி செயலாளர் வினோத்குமார், கே.என். சுப்பாராஜ் நினைவு ஆசிரியர் பயிற்சி பள்ளி நிர்வாகி ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவர் தேவசேனா தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரிப்பு செய்தனர். முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை மாவீரன் பகத்சிங் ரத்ததான கழகத்தினர் செய்திருந்தனர்.