தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி ஒரு களவாணியா..? - ஸ்டாலின் மீது போலீசில் பாஜகவினர் புகார்! - compliant again stalin

தூத்துக்குடி: பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தி, தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது நடவடிக்கைகோரி தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

By

Published : May 3, 2019, 3:30 AM IST

தூத்துக்குடி மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் சிவராமன் தலைமையில் அக்கட்சியினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தனர். அதில், "கடந்த மே.1 ஆம் தேதி காலை சுமார் 9.30 மணியளவில், திமுக சார்பில் தூத்துக்குடியில் மே தின பேரணி நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக விவிடி சிக்னல் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு பேசும்பொழுது, பிரதமர் மோடி தன்னை நாட்டின் காவலாளி என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் காவலாளி அல்ல. அவர் ஒரு களவாணி என்று பேசியுள்ளார். நாட்டின் பிரதமரை இழிவுபடுத்தி தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது, பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், திமுக தலைவர் ஸ்டாலின் மீது சட்டரீதியிலான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details