தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவுக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.. கே.எஸ்.அழகிரி

பாஜகவுக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. கே.எஸ்.அழகிரி

By

Published : Aug 26, 2022, 9:43 AM IST

தூத்துக்குடி: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியின் ‘இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை’ குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வருகை தந்தார்.

அவரை தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையிலான கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பொழுது நாட்டில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

ஆர்எஸ்எஸ் கலாச்சாரம் மக்களை பிரிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. நாட்டில் வரலாறு காணாத வகையில் விலை வாசி உயர்ந்திருக்கிறது. அமெரிக்கர் டாலர் இப்போது 80 ரூபாய் வரை வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்ட நிலையில் உள்ளது. காரணம், தவறான பொருளாதார கொள்கை தான்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பு

விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் வருவதாக மோடி சொன்னார்; அதுவும் நடக்கவில்லை. இது அரசாங்கத்தின் தவறு. இதை மக்களிடம் எடுத்துக் கொண்டு சொல்ல இந்த பயணம் மேற்கொள்ளப்படும்” என பேசினார்.

இதனைத்தொடர்ந்து பாஜக, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரப்படுத்தி வருவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய கே.எஸ்.அழகிரி, “பாஜகவுக்கும் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் பங்கெடுத்து இருக்கிறார்கள்.

பாஜக இப்போதாவது சுதந்திரத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி. இவ்வளவு காலம் ஏன் பாஜக பங்கெடுக்கவில்லை? சுதந்திரதினநாள் அன்று ஏன் கொடி ஏற்றவில்லை? ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இதுவரை இரண்டு தடவை மட்டுமே சுதந்திரக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது.

ஒன்று, நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தபோது; மற்றொன்று வாஜ்பாய் பிரதமராகச் சென்றபோது. இந்நிலையில் இப்போது கொண்டாடக்கூடிய காரணம் என்ன? அப்போது கொண்டாடிய காரணம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:தாய்ப்பாலுக்குக்கூட பிரதமர் மோடி வரி போடுவார்! - கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details