தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 9ஆவது சுழற்கோப்பைக்காக ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப் ராமகிருஷ்ணன் நினைவு மின்னொளி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் 17ஆம் தேதி இரவு முதல் நடைபெற்றுவந்தது.
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: கோப்பை வென்ற சென்னை கல்லூரிகள் - loyola college
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான கூடைப்பந்துப் போட்டியில் சென்னை கல்லூரிகள் வெற்றிபெற்றன.
கூடைப்பந்துப்போட்டி
நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம், சென்னை லயோலா உள்ளிட்ட 6 அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னை எத்திராஜ், பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரி உள்ளிட்ட 6 அணிகளும் கலந்துகொண்டன. நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும், பெங்களுரு ஜெயின் பல்கலைக்கழக அணியும் மோதியது. இதில் 58-40 என்ற புள்ளி கணக்கில் லயோலா கல்லூரி வெற்றிபெற்றது.