தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனைத்து இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், தேசிய வங்கிகளை தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்சி கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேசிய வங்கிகளை தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பு - Thoothukudi bank officer
தூத்துக்குடி: தேசிய வங்கிகளை தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வங்கி ஊழியர்கள் இன்று (மார்ச் 6) கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வங்கி ஊழியர்கள் போராட்டம்
கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் கனரா வங்கி மேலாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். அனைத்து இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர், கூட்டமைப்பு உறுப்பினர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
இதில் வங்கி ஊழியர்கள் திரளானவர்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.