தூத்துக்குடி மாவட்ட சீர்மரபினர் நலச் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை இன்று (நவ. 03) சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மருத்துவ இட ஒதுக்கீட்டில் 15% அகில இந்திய தொகுப்பில் ஒதுக்கீடும், 85% மாநில அரசின் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால் தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டவிதிகளின்படி 18% எஸ்.சி.க்கும், 1% எஸ்.டி.பிரிவினருக்கும், 30% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் சட்டத்தை தவிர வேறு எதுவும் மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டு சட்டத்தை கட்டுப்படுத்தாது.