தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள இராமானுஜம்புதூர் பஜாரில் சங்கரநாராயணன்(50), ஆயிரம்(50), பூவலிங்கம் ஆகிய மூவரும் நின்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில், பலத்த காயமடைந்த மூவரையும் அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.