தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழக அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி குறைவு" - அண்ணாமலை சாடல்! - பருத்திவீரன் பட விவகாரம்

annamalai press meet: தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி குறைவு, இது தமிழகத்தினுடைய சாபக்கேடு என்று கூறினார்.

annamalai press meet
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 8:30 PM IST

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

தூத்துக்குடி: கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை தந்தார். பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். இது முதல் தடவை கிடையாது. கடைசியாக இருக்கப் போவதும் இல்லை. காரணம், அமலாக்கத்துறை, சிபிஐ இதுபோன்ற ஸ்பெஷல் ஏஜென்ஸியில் இதற்கு முன்பு நிறைய பேர் கைதாகி உள்ளார்கள்.

ஒரு மனிதன் தவறு செய்வதற்காக, ஒரு முழு அமலாக்கத்துறையையும் மோசம் என்று சொல்ல முடியாது. அதேபோல, தமிழக காவல்துறையில் யாரோ ஒருத்தர் தவறு செய்வதற்காக தமிழக காவல்துறையை மோசம் என்று சொல்ல முடியாது. இது மனிதனுடைய வாழ்க்கை. அமலாகத்துறை தவறு செய்தால் நிச்சயமாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில், எந்தவித மாற்று கருத்தும் இல்லை. குறிப்பாக, அமலாக்கத்துறை என்பதால் இன்னும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் அதிலும், என்ற மாற்றுக்கருத்தும் இல்லை. இதனை அரசியலாக பார்க்க வேண்டாம். இதற்காக மொத்த அமலாக்கத்துறையும் சேர்க்க வேண்டாம். தமிழக அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி குறைவு. இது தமிழகத்தினுடைய சாபக்கேடு, 2024 ஆம் ஆண்டு மற்றும் 2026 ஆம் ஆண்டு பாஜக இதற்கு விமோசனம் கொடுக்கும்.

சென்னையைப் பொருத்தவரையில் இது புதிது கிடையாது. கருணாநிதி காலத்தில் வேஷ்டியை மடிச்சு கட்டிட்டு நடந்து போனார்கள். மு.க.ஸ்டாலின் வேஷ்டியை மடிச்சு கட்டி நடந்து போனார். அவருடைய பையன் உதயநிதி ஸ்டாலினும் பேண்ட் தூக்கிட்டு நடந்து போனார். அடுத்து உதயநிதி ஸ்டாலின் பையன் நடந்து போவார்.

காரணம், திமுக சென்னையைப் பார்க்கின்ற கோணமே வித்தியாசமாக உள்ளது. திமுகவை பொறுத்தவரை சென்னையை எப்படி பார்க்கிறார்கள் என்றால் ஏதோ அவசரக் கதியில் ஒரு பணியை செய்து விடலாம். 4,000 கோடி ரூபாய்க்கு பணி செய்து இருக்கோம் என்று திமுக கூறி வருகிறார்கள்.

ஆனால், ஒரு சாதாரண மழைக்கு கூட சென்னை தாங்க முடியாத நிலைமை தான். ஒரு பத்து வருடத்திற்கு ஏரிகள் எல்லாம் நிரம்பி இன்னும் பெரிய பிரச்னை வரும். இதற்கு ஒரு தீர்வு கொடுப்பதற்கான மனநிலை யாரிடமும் இல்லை. மழைப் பிரச்னையை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று தமிழகத்தை இதுவரை ஆண்ட கட்சிகளுக்கு ஒரு ஐடியா இல்லை.

மண் சட்டியில் குதிரை ஓட்டி கொண்டு இருக்கிறார்கள். இதை மாற்ற வேண்டும். குறிப்பாக, சென்னையை திமுக கோட்டை என்று சொல்வார்கள். திமுக சென்னை மக்களுக்கு வெறும் துயரத்தை மட்டுமே மழைக்காலத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக வந்துவிட்டது: 2018 இல் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 1 எம்எல்ஏ, அதன்பின், தெலுங்கானாவில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 1 லிருந்து 2 டிஜிட்க்கும் அதிகமான சீட்கள் கிடைக்கும். அதே போல, 2019 லோக்சபா தேர்தலில் தெலுங்கானாவில் இருந்து பாஜக சார்பில் 4 எம்பிக்கள் இருந்தனர். 2024 நாடாளுமன்றத்தில் அதிகமாக இருக்கும்.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை, பாஜகவின் மாநிலத்தேர்தல்கள் வெற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றிக்கான அடித்தளம். குறிப்பாக, தெலுங்கானா மாநிலத்தில் பாஜக வந்துவிட்டது. வருகின்ற காலம் பாஜக காலம் என்று உணர்த்தப்போகிறது.

கொலை காடாக மாறிய தென் தமிழகம்: தென் தமிழகம் கொலைகார காடாக மாறி வருகிறது. குறிப்பாக, தென் தமிழகத்தில் கொலைகள் அதிகமாகி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் டெவலப்மெண்ட் இல்லை. ஒரு பக்கம் காவல்துறை அலட்சியப்போக்கு. ஒரு பக்கம் ஆளும்கட்சி அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள். காவல்துறை வேலையை துரிதமாக செய்ய வேண்டும். அது மாறும்போது சட்டம் ஒழுங்கு நிச்சயமாக மாறும்.

மீனவர்களுக்கு துணைநிற்கும் மத்திய அரசு:மாலத்தீவு இந்திய படகை சிறை பிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெயசங்கரிடம் பேசி உள்ளேன். கடிதமும் அனுப்பி உள்ளோம். அந்த அபராதத் தொகையை மத்திய அரசு ஏற்று கட்டி விட வேண்டும். கட்டாமலும் வெளியே கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

மாலத்தீவில் வரக்கூடிய அதிபர் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். மாலத்தீவின் அதிபர் எப்போதும் முதல் விசிட் இந்தியாவில் இருக்கும். இந்த முறை எகிப்து சென்றிருக்கிறார்கள். நாம் உறுதியாக மீனவர்களுடன் இருக்கிறோம். மீனவர்கள் பத்திரமாக வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு இருக்கிறது.

சினிமாவும், அண்ணாமலையும்: ஞானவேல் ராஜா மற்றும் அமீர் இடையே உள்ள பிரச்னை குறித்து கேள்விக்கு, அதிகமாக சினிமாவுக்குள்ளே போவதில்லை. ஆக்கப்பூர்வமான விஷயத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.

இதையும் படிங்க:மத்திய படைகளை தமிழக காவல்துறையை மிரட்டிப் பார்க்கிறார்களா? - கே.எஸ்.அழகிரி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details