தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் "தூய்மையில் மக்களின் பங்களிப்பு" என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையாளர் சாருஸ்ரீ, துணைமேயர் ஜெசிந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி மேயர் ஜெகன், "தூத்துக்குடி மாநகராட்சியில் நாள்தோறும் 180 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் தரம் பிரித்தெடுக்கப்பட்டு 11 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உரமாக்கப்படுகின்றன.
தூத்துக்குடியில் இயற்கை உரம் தயாரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மையில் மக்களின் பங்களிப்பு என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது
தூத்துக்குடி மாநகராட்சியில் தேவைக்கேற்ப கூடுதலாக நுண் உர மையம் அமைக்கப்படும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் தனசிங், சரவணன், சுகாதார நல அலுவலர் அருண், சுகாதார ஆய்வாளர்கள் அரிகனேஷ், ராஜபாண்டி மாநகராட்சி உறுப்பினர்கள் ஜான்சிராணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கரோனா