தூத்துக்குடி:அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற 10 நாடுகளை சார்ந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து கடந்த மாதம் 22ம் தேதி 386 மாலுமிகள் உட்பட 698 பயணிகளுடன் அமேரா என்ற கப்பல் புறப்பட்டது. இந்த கப்பல் கடந்த 28ஆம் தேதி கொச்சியில் இருந்து புறப்பட்டு இன்று (ஜன.11) காலை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை வந்தடைந்தது.
தமிழர்களின் முறைப்படி மங்கள இசை, ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 672 அடி நீளம், 92 அடி உயரம் கொண்ட இந்த கப்பலில், 13 அடுக்குகள் உள்ளன. மேலும் இதில் 413 அறைகள் மற்றும் நீச்சல் குளம், நூலகம், பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் அடங்கியுள்ளது.