தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அதிமுக அமைச்சர்...காரணம் என்ன தெரியுமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலின் எங்களை பற்றி பேச, பேச அதிமுகவிற்கு வாக்கு வங்கி அதிகரிக்கும். ஆகவே, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

By

Published : Jan 14, 2021, 6:13 AM IST

பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சார்பில் காந்தி மைதானத்தில் தூய்மை திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு கொடியசைத்து வைத்து தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி கமிஷனர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேர்தல் வரும் பொழுது ஒவ்வொரு கட்சியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவது இயல்பான விஷயம் தான். அந்தக் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை, என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்த பின்னர் அதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தமிழ்நாடு மக்கள் அதிமுக ஆட்சியை விரும்புகின்றனர்.

தை பிறந்த பின்னரும் நல்ல வழி தொடரும். ஜெயலலிதா மறைவு முதல் ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். 2016ஆம் ஆண்டு டிசம்பர் 6 முதல் லட்சம் தடைவையாது ஆட்சி மாற்றம் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருப்பார்.

நாடாளுமன்ற தேர்தலில் போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி தொடர்கிறது. ஆட்சி தொடரும் என்ற மனநிலையில் தான் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தான் தமிழ்நாடு வாக்களர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

10 ஆண்டுகால ஆட்சியில் எவ்வித குறையும் இல்லை என்று தான் மக்கள் எங்களை இன்முகத்துடன் வரவேற்கிறார்கள். ஆட்சி தொடரும் என்ற நிலையில் தான் தேர்தலை தவிர ஆட்சி மாற்றம் என்ற தலைப்பில் இல்லை. பிரதமர் மோடி 2ஆவது முறை பெருபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி தொடர்வது போன்று தமிழ்நாட்டில் அதிமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி தொடரும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர்.

திரைப்படத்துறையை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் எடுக்கும் திரைப்படத்தினை வெளியிட தடை எதுவும் இல்லை. ஒரு காலத்தில் யார் படம் எடுத்தாலும் ரெட்ஜெயிண்ட் மூவி நிறுவனத்திற்கு தான் விற்பனை செய்ய வேண்டும். அவர்கள் வெளியிட வேண்டும் என்ற நிலை இருந்தது. இன்றைக்கு சிறு தயாரிப்பாளர்கள் படம் எடுத்தால் கூட வெளிப்படதன்மையாக வெளியீடும் நிலை உள்ளது.

சமத்துவ பொங்கல் விழா

சமானியர்கள் கூட இன்றைக்கு சினிமாதுறைக்கு வரக்கூடிய நிலை உள்ளது. திரைத்துறையினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்துவருகிறது. தமிழ் திரைப்படத்துறை ஹாலிவுட்டுக்கு இணையாக வளர்ச்சியை பெற்றுள்ளது.

பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்கள், மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, நன்கு ஆய்வு செய்து தான் அரசு அறிவித்துள்ளது. கேபிள் டிவி தொழிலில் தங்களது குடும்பத்தினர் வருமானம் பெற வேண்டும் என்பதற்காக சுயநலத்துடன் திமுக இலவச தொலைக்காட்சியை மக்களுக்கு வழங்கியது. ஆனால், இன்றைக்கு இந்தியாவில் கேபிள் டிவி டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ள அரசு தமிழ்நாடு தான்.

குறைந்தக் கட்டணத்தில் அரசு கேபிள்டிவி சேவையை வழங்கி வருகிறது. கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் ஏழை,எளிய மாணவர்கள் பங்கேற்று பயன்பெறவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் 2ஜிபி இலவச டேட்டாவை வழங்கியுள்ளார்கள்.

திமுக எதுவும் செய்யாது, செய்யும் எங்களை பற்றியும் குறை சொல்கிறார் மு.க.ஸ்டாலின். அவர் எங்களை பற்றி பேச, பேச எங்களுக்கு வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது. ஆகையால், அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details