திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாய் சேகர் ரிட்டன், மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறேன் எனவும், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படம் நடித்து வருவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ”அரசியல் நமக்கு தேவையில்லை, சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம்” என்றார்.
போண்டா மணிக்கு உதவி செய்யனும் - நடிகர் வடிவேலு - திருச்செந்தூர் முருகன் கோயில்
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்ய வேண்டும் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலு அளித்த பேநடிகர் வடிவேலு அளித்த பேட்டிட்டி
போண்டா மனி குறித்த கேள்விக்கு, அவருக்கு ஏதாவது உதவி செய்யணும் என தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் ஆட்சி நன்றாக உள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்தார். முன்னதாக எந்தந்த தொலைக்காட்சி வந்துள்ளீர்கள் எனவும், உடன் வந்தவர்களை பின்னாடி செல்லுங்கள் ,வயிறு தட்டுது என நகைச்சுவையாக கூறி கலாய்த்தார்.
இதையும் படிங்க:சிலிர்க்க வைக்கும் ‘சிவ சிவாயம்’ பட்டித்தொட்டியெங்கும் வைரலான ‘பகாசூரன்’ பாடல்!