தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Viral Video: பிரபல ஹோட்டலில் இருந்த சிக்கனை ருசித்த நாய் - தெரு நாய்

தூத்துக்குடியில் உள்ள ஒரு ஹோட்டலில் சவர்மாவுக்கு தயார் செய்துவைக்கப்பட்ட சிக்கனை தெரு நாய் சாப்பிடும் வீடியோ வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 30, 2023, 9:22 PM IST

Updated : Jan 31, 2023, 8:16 PM IST

Viral Video: பிரபல ஹோட்டலில் இருந்த சிக்கனை ருசித்த நாய்

தூத்துக்குடியில் பிரபல தனியார் குடும்ப உணவகமான ‘சமுத்திரா ஹோட்டல்’ தூத்துக்குடியில் சுமார் 4க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. இதில், ஜார்ஜ் ரோட்டில் இயங்கி வரும் ஒரு கிளையில் சவர்மா தயார் செய்வதற்காக சிக்கனை வேக வைத்துள்ளனர்.

அப்போது, சவர்மா தயாரிக்கும் இடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாமல், கவனக்குறைவாக ஹோட்டல் நிர்வாகம் செயல்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற தெரு நாய், ஆசை ஆசையாக சிக்கனை விலை இல்லாமல் ருசித்து சாப்பிட்டது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த கடைக்குச் சென்ற மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைக்குச் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். உணவு டோர் டெலிவரி மற்றும் வாடிக்கையாளருக்கு வழங்க சொமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களுடன் இந்த உணவகம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பள்ளி மாணவியை கிண்டல் செய்ததைத் தட்டிக்கேட்டதால் தாக்குதல்!

Last Updated : Jan 31, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details