கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையில் கடந்த ஞாயிறு அன்று கழிப்பறையை பயன்படுத்த சென்றவர் வெகுநேரமாகியும் வெளியே வரமால் இருந்துள்ளார். இதனையடுத்து ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அந்த நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
கோவில்பட்டியில் மர்மமான முறையில் ஒருவர் இறப்பு! - கோவில்பட்டி மர்ம மரணம்
தூத்துக்குடி:அண்ணா பேருந்து நிலையத்தில் மர்மமான முறையில் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
a-old-man-death-in-kovilpatti-bus-stand
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் அந்த நபரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
TAGGED:
கோவில்பட்டி மர்ம மரணம்