தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது அருந்திவிட்டு கண்மாய்க்கு குளிக்கச் சென்றவர் மூழ்கி பலி - கோயில் திருவிழா

தூத்துக்குடி: கோயில் திருவிழா காண வந்தவர், மது அருந்தி நிலைதடுமாறி கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருவிழா காணவந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

dead
dead

By

Published : Feb 24, 2020, 10:27 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு கிராமத்தில் கருப்பசாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் முக்கிய விழாவான மாசி விழாவினைக் காண்பதற்காக நெல்லை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர்.

அந்தவகையில், மதுரை தந்தநேரி பாக்கியநாதன் நகரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரும் கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது, மது அருந்திவிட்டு கோயில் அருகே உள்ள பெரிய கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கண்மாயில் நிலைத்தடுமாறி மாரியப்பன் தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த மக்கள் விரைந்து கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

மது அருந்தி கண்மாயில் குளிக்கச் சென்றவர் மூழ்கி பலி

தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கண்மாயில் மூழ்கிய மாரியப்பனை தேடினர். அரைமணிநேரத்திற்குப் பின் உயிரிழந்த மாரியப்பனின் உடலை மீட்டனர். பின்னர் காவல் துறையினர் மாரியப்பனின் உடலை உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவுக்கு வந்தவர் கண்மாயில் மூழ்கி இறந்த சம்பவம் திருவிழா காணவந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'சிக்கினான் சைக்கோ கொலையாளி' - காவல் துறை தீவிர விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details