தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரிகார பூஜை எனக்கூறி 6½ பவுன் தங்க நகை அபேஸ் வழக்கு - குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை!

Tuticorin Crime News: தூத்துக்குடி அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி, 6½ பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 10:15 PM IST

தூத்துக்குடிமாவட்டம், நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என்.புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரது மனைவி உலகாண்ட ஈஸ்வரி. இவரிடம் அவரது உறவினரான கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் முத்துராமலிங்கம் என்பவர் பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி, கடந்த 14.04.2021 அன்று உலகாண்ட ஈஸ்வரி வீட்டில் வைத்து முத்துராமலிங்கம் பரிகார பூஜை செய்து உலகாண்ட ஈஸ்வரியின் 6 ½ பவுன் தங்க நகைகளை துணியால் மூடப்பட்ட ஒரு பாத்திரத்தில் வைக்க சொல்லியுள்ளார்.

பின்னர், உலகாண்ட ஈஸ்வரிக்கு தெரியாமல் அந்த தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் ஒரு கல்லை வைத்து விட்டு பரிகார நாட்கள் முடியும் வரை பாத்திரத்தை திறக்கக்கூடாது என்று கூறி தங்க நகைகளை மோசடி செய்து ஏமாற்றிய வழக்கில் நாரைக்கிணறு காவல் நிலைய போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரணை செய்த அப்போதைய நாரைக்கிணறு காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் புலன் விசாரணை செய்து கடந்த 13.10.2021 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை இன்று (டிச.1) விசாரித்த நீதிபதி ஜெயந்தி குற்றவாளியான முத்துராமலிங்கம் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய நாரைக்கிணறு காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முருகேசன் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் பெருமாள் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.

இதையும் படிங்க:சோழபுரம் கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை - இஸ்லாமி அமைப்பினர் சாலை மறியல்... தள்ளுமுள்ளு!

ABOUT THE AUTHOR

...view details