தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி சோபியா வழக்கு: பொன்ராம் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர் - SHRC

தூத்துக்குடி: சோபியா வழக்கை கையாண்ட தூத்துக்குடி துணை காவல்துறை கண்காணிப்பாளர் பொன்ராம் உள்ளிட்ட காவல் அலுவர்கள், மாநில மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜராகினர்.

SHRC

By

Published : Mar 15, 2019, 9:57 PM IST

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சோபியா வழக்கில் பாஜக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆராய்ச்சி மாணவி சோபியா, கைது செய்யப்பட்ட பின் தூத்துக்குடி நடுவர் நீதிமன்றத்தின் மூலம் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சமயத்தில், சோபியா கைது தொடர்பாகவும், தமிழிசை மீது அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலக்கழித்தது எனவும் சோபியாவின் தந்தை சாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக நெல்லையில் இன்று நடைபெற்ற விசாரணையில், தூத்துக்குடி துணை காவல்துறை கண்காணிப்பாளர் பொன்ராம், தூத்துக்குடி நகர துணை காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ், சிறப்புப் பிரிவு ஆய்வாளர் பாஸ்கர், தனிப் பிரிவு துணை ஆய்வாளர் நம்பி, புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் அன்னத்தாய், உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு மனித உரிமை ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details