தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் 7 வயது சிறுமி கொடூரக் கொலை - 2 இளைஞர்கள் கைது - தூத்துக்குடி சிறுமி கொலை வழக்கில் இரண்டு பேர் கைது

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமியை கொடூரமாகக் கொன்ற சம்பவத்தில் இரண்டு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தூத்துக்குடியில் 7 வயது சிறுமி கொலை
தூத்துக்குடியில் 7 வயது சிறுமி கொலை

By

Published : Jul 15, 2020, 8:06 PM IST

Updated : Jul 16, 2020, 9:57 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்கள் சேகர், உச்சிமாகாளி தம்பதி. உச்சிமாகாளி, கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சிறுமி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு டிவி பார்க்க சென்றார்.

அப்போது அந்த வீட்டிலிருந்த இளைஞர் முத்தீஸ்வரர் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் நிரப்பும் டிரம்மில் வைத்து மூடியுள்ளார். பின்னர் அவருடைய நண்பர் நந்தீஸ்வரனுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். தொடர்ந்து சிறுமியைக் கொன்று வைத்திருந்த டிரம்மை அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று பாலத்தின் அடிப்பகுதியில் மறைத்து வைத்துவிட்டு, அவசர அவசரமாக வண்டியில் ஏறி இருவரும் புறப்பட்டுள்ளனர்.

இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்தபோது டிரம்மில் சிறுமி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குற்றவாளிகளான முத்தீஸ்வரன், நந்தீஸ்வரனை காவல் துறையினர் கைது செய்தனர்.

சிறுமியின் உடல் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறும்போது, "சிறுமி கொலை வழக்கில் இரண்டு பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகு, அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாரா, இல்லையா என்பது குறித்து தெரியவரும்" என்றார்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு நகை சேகரிக்க துன்பப்பட்ட பெற்றோர்: மகள் தற்கொலை

Last Updated : Jul 16, 2020, 9:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details