தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு.. - 10 வயது சிறுவன் பலி

திருச்செந்தூர் அருகே பள்ளியின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 வயது மாணவன் தலையில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவன் உயிரிழப்பு
பள்ளி மாணவன் உயிரிழப்பு

By

Published : Jan 4, 2023, 8:06 AM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மகன் அஜய்குமார் (10), அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பள்ளியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அஜய்குமார் உள்ளிட்ட மாணவர்கள் சிலரை, ஜனவர் 2ஆம் தேதி அன்று, ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைத்து தோட்ட வேலை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது மாணவன் அஜய் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அஜய்குமார் உடலை வாங்க மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவரின் உறவினர்கள் கூறியதாவது, “பள்ளி விடுமுறை தினமான அன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு அழைக்கப்பட்டு பள்ளியில் பராமரிப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது சட்ட விரோதமான செயல். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பள்ளியில் இது போன்ற சம்பம் நடப்பது முதல்முறை அல்ல. பலமுறை இதுபோல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவன் பாதிக்கப்பட்டபோது ஆசிரியர்கள் அருகிலேயே இருந்துள்ளனர். தவறுக்கு அவர்கள் உடந்தையாக இருக்க வேண்டும் அல்லது தவறு செய்தவர்களை மறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

இதற்கு, உடற்கூராய்வுக்கு பின்பு உண்மைகள் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மாணவனுக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த மாணவனின் தாயாருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை குடும்பத்திற்கு உரிய இழப்பு அரசு வழங்க வேண்டும். அதன் பின்பே உடலை பெற்று கொள்வோம்” என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சிசிடிவி காட்சி ; சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டு..

ABOUT THE AUTHOR

...view details