தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: 19 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவிலிருந்து குணமடைந்த 19 பேர் வீடு திரும்பினர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை
தூத்துக்குடி அரசு மருத்துவமனை

By

Published : Jun 9, 2020, 3:14 AM IST

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 154 பேர் கரோனாvaal பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் தூத்துக்குடி போல்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, சிறுமி என 3 பேருக்கும், கூட்டாம்புளியை சேர்ந்த 9 பேருக்கும், ஏரல் காவல் நிலைய காவலர்கள்‌ 4 பேருக்கும் என மொத்தம் 26 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமாக 355 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை, தூத்துக்குடி மருத்துவ கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மருத்துவர் இளங்கோ ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details