தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தலைமையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா! - sp Jayakumar

தூத்துக்குடியில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

பனை விதைகள் நடும் விழா
பனை விதைகள் நடும் விழா

By

Published : Oct 8, 2020, 10:43 PM IST

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று(அக்.8) 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. விழாவினை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.

அதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் உள்பட பலர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதைத்தொடந்து விழாவில் ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய ஜெயக்குமார், "இந்த துப்பாக்கி சுடும் தளம் 96 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் எல்லை ஓரங்களில் 10,000 பனை மர விதைகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. பனைமரங்கள் மண் வளம் மற்றும் நீர் வளத்தை காக்கக்கூடியது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நிலத்தடி நீரைப் பாதுகாக்க முழு மூச்சுடன் களமிறங்கும் காக்கை அறக்கட்டளை...!

ABOUT THE AUTHOR

...view details