தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹோட்டல் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு..! - electric shock

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் ஹோட்டலில் பணிபுரிந்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு  திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு  Youth dead by electric shock in Thiruthuraipoondi  electric shock Deads  electric shock  Deaths
electric shock Deads

By

Published : Dec 3, 2020, 4:11 PM IST

திருவாரூர் மாவட்டம், விளக்குடி பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (வயது 28). இவர் திருத்துறைபூண்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

தற்போது, 'புரெவி' புயல் காரணமாக டெல்டா பகுதிகள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சகாயராஜ் ஹோட்டலில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது சட்னி தேவைக்காக தேங்காய் அரைப்பதற்க்காக மிக்ஸி வயரை எடுத்து மின் சாதன பெட்டியில் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details