திருவாரூர்: நன்னிலம் அருகே கூத்தனூரில் மகாசரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன்படி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று 'தனிக்கோயில்' கூத்தனூரில் தான் அமைந்துள்ளது.
ஒட்டக்கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்ட திருத்தலம் என்பதால், இது 'கூத்தனூர்' எனப் பெயர் பெற்றது.
இந்த ஆண்டு நவராத்திரி நிகழ்ச்சிகள் 12 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது. ஒன்பதாவது நாளான இன்று (அக்.14) சரஸ்வதி பூஜை பாத தரிசனம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற கலை நிகழ்சிகள், இந்த ஆண்டு நடைபெறவில்லை.