தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் திருமணமான இரண்டே ஆண்டில் பெண் தற்கொலை! - திருவாரூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர்: திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனா
மீனா

By

Published : Jun 5, 2021, 10:21 PM IST

திருவாரூர்: சேங்காலிபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி மீனா (21). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், திருமணம் ஆன மூன்று மாதத்தில் கணவர் ரமேஷ் வெளிநாடு வேலைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனா, செங்காலிபுரத்தில் உள்ள தனது கணவர் வீட்டில் மாமியாருடன் வசித்து வந்ததார். இந்த நிலையில் மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குடவாசல் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மீனாவின் தந்தை ராஜேந்திரன், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முதலாளி கொடுத்த ரூ.7.20 லட்சம்: திருடப்பட்டதாக பொய் கூறிய நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details