தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்நிலையத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு! - கண்டெடுப்பு

திருவாரூர்:மன்னார்குடி காவல்நிலையத்தில் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐம்பொன் சிலை

By

Published : Jul 28, 2019, 9:40 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அறையில் சாக்கு பை ஒன்று இருந்துள்ளது. அதனை காவலர்கள் பிரித்து பார்த்த பொழுது சுமார் மூன்று அடி உயரத்தில் உலோகத்தால் ஆன பெருமாள் சிலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்த சாமி சிலையை கைப்பற்றி சிலை குறித்து விசாரணை செய்தனர்.பின்னர், வழக்கு பதிவேடு தகவல்களை ஆராய்ந்து பார்த்தபோது, பெருமாள் சிலை தொடர்பான எந்த தகவல்களும் இல்லை எனக் கூறப்படுகிறது.

காவல்நிலையத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு!

இதையடுத்து, மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக், ஆய்வாளர் ராஜேந்திரனும் பெருமாள் சிலை குறித்து வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகு மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்தியிடம் பெருமாள் சிலை ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலையின் மதிப்பு என்ன, தங்கத்திலான சிலையா, ஐம்பொன் சிலையா என ஆய்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் இருந்த சிலை எந்த கோயிலில் இருந்து திருடபட்டபோது பிடிபட்டது, வழக்கு பதிவேடு தகவல்கள் இல்லாமல் பெருமாள் சிலை எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details