திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குன்னியூர் கிராமத்தில் புதிதாக அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தமிழ்நாடு அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிதாக மதுபானக் கடை திறப்பு; கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் - Thiruvarur district
திருவாரூர்: மன்னார்குடி அருகே புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Villagers protest against the opening of a new Tasmac shop
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கரோனா தொற்று ஊரடங்கு இருக்கும் வரை புதிய டாஸ்மாக் மதுபான கடையை திறக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் மீறி அனுமதி கொடுத்தால் தொடர்ந்து பொது மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.