விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைநிலை அமைப்பான அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் தோப்பு தெருவில் வசிக்கும் 100 எளிய குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை, தொல்.திருமாவளவன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகிக்க, கட்சியின் மாவட்ட செயலாளர் வடிவழகன் அத்தியாவசிய பொருட்களை கொடுத்து தொடக்கி வைத்தார். நிவாரண பொருள்கள் வழங்கும்போது, கட்சியின் திருவாரூர் ஒன்றிய செயலாளர் பூபாலன், ஊடக மையம் மாவட்ட துணை அமைப்பாளர் எண்கண் இரகுவரன், கட்சி தொண்டர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள்: காணொலி வாயிலாக தொடக்கி வைத்த திருமா - tiruvarur district news in tamil
திருவாரூர்: கரோனா நிவாரணப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காணொலி மூலம் தொடக்கி வைத்தார்.
திருமா