திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
”திருவாரூரில் வேல் யாத்திரைக்கு அனுமதியளிக்கக்கூடாது” - விசிக - bjp vel yathirai
திருவாரூர் : வேல் யாத்திரைக்கு அனுமதியளிக்கக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் வேல் யாத்திரை என்ற பெயரில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வேல் யாத்திரை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி மாநிலம் முழுவதும் யாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நடத்தி வருகிறார்.
வருகின்ற 25ஆம் தேதி திருவாரூரில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த வேல் யாத்திரையை திருவாரூர் ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.