திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் வடவாறு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கலை நம்பி சுற்றுவட்டார விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வாய்க்காலின் இருப்புறத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளதால், பாசன வசதி பெறமுடியவில்லை என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை அகலப்படுத்தி தருமாறும் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்தார்.
அரசு அலுவலர்களை வேலை செய்ய வைத்த தாம்பூலத் தட்டு! - inspection
திருவாரூர்: மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா பொதுபணித்துறை, கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட வருமாறு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பு விடுத்ததன் எதிரொலியாக அரசு அலுவலர்கள் இன்று நேரில் வந்து பார்வையிட்டு வாய்க்காலை அகலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பின்பு அங்கிருந்து பொதுப்பணித்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலரைத் தொடர்புகொண்டு ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் வரவில்லை. இதையடுத்து அவர் தாம்பூல தட்டுடன் அரசு அலுவலர்களை நேரில் சந்தித்து வாய்க்காலை ஆய்வு நடத்த வருமாறு கோரிக்கை வைத்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எம்எல்ஏ அழைப்பை ஏற்ற பொதுப்பணித்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்ததோடு, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி வாய்க்காலை அகலப்படுத்துவதாகவும் உறுதியளித்தனர்.