திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார், நிஷா. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு சசிவிந்த்(4), அசிவிந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இரண்டு குழந்தைகளும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கூறியதால், மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை அளித்துவந்துள்ளனர்.
ஆனால் இரண்டு குழந்தைகளுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்ப்பட்டு நேற்று சசிவிந்தும் இன்று அசிவிந்தும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் இந்த குழந்தைகளுக்கு என்ன வியாதி உள்ளது என்பது தெரியாமலேயே மருத்துவம் பார்த்ததால்தான் குழந்தைகள் இறந்துள்ளதாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குழந்தைகள் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு. கடந்த 3 மாதத்தில் மன்னார்குடி அருகே இதுவரை நான்கு குழந்தைகள் இறந்துள்ளதனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை முயற்சி தோல்வி - மிளகாய் பொடியை தூவிச்சென்ற கொள்ளையர்கள்