தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடி மாத திருவிழாக்கள் நடத்த அனுமதி கோரும் தமிழ்நாடு கிராம பூசாரிகள் பேரவை - etvbharat

கிராம கோயில்களில் பாரம்பரிய வழக்கப்படி ஆடி மாத திருவிழாக்கள் நடத்த அனுமதியளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு கிராம பூசாரிகள் பேரவை சார்பில் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

ஆடி மாத திருவிழாக்கள் நடத்த அனுமதியளிக்க வேண்டும்
ஆடி மாத திருவிழாக்கள் நடத்த அனுமதியளிக்க வேண்டும்

By

Published : Jul 19, 2021, 3:22 PM IST

திருவாரூர்: தமிழ்நாடு கிராம பூசாரிகள் பேரவை அமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூலை 18) நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம பூசாரிகள் பேரவை

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு கிராம பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் கூறியபோது, "தற்பொழுது ஆடி மாதம் என்பதால் கிராமப்பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

எனவே தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் பாரம்பரிய வழக்கப்படி திருவிழாக்கள் நடைபெற அரசு அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இந்நிகழ்வில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள், நலவாரியத்திற்கான விண்ணப்பங்கள், உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: 'நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை'

ABOUT THE AUTHOR

...view details