திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மகாலிங்கம் என்பவருக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடு சுமார் 2லட்சத்து 10ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சிமெண்ட் இன்றி கட்டப்பட்ட கான்க்ரீட் வீடு: திறந்து வைத்த ஆட்சியர் - பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்
திருவாரூர்: முதல் முறையாக சிமெண்ட், செங்கல், மணலின்றி புதிய முறையில் கட்டி முடிக்கப்பட்ட கான்க்ரீட் வீட்டை மாவட்ட ஆட்சியர் சாந்தா திறந்து வைத்தார்.
homes opening
குறிப்பாக மணல்,செங்கல், சிமெண்டை தவிர்த்து Autoclaved aerated concrete block என்ற கற்களைக் கொண்டு விரைவாகவும் தரமாகவும் ஒரு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கட்டிட பணிகள் குறித்து அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.