தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை 411 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 12 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நிலக்கோட்டையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை கரோனா வார்டாக மாற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகள் இரண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இங்கு 400 படுக்கை வசதிகள் மருத்துவத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லி இஸ்லாமிய மத மாநாட்டில் பங்கேற்ற 19 பேர் உள்பட அவர்களது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உள்ளிட்ட 75 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தை கரோனா வார்டாக மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு அவர்களின் ரத்த மாதிரிகள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவர்கள் அவர்களுடைய ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.