தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் மநீம வேட்பாளர் இளைஞர் பட்டாளத்துடன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு! - MNM candidate Arun sithambaram

திருவாரூர்: மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவை வேட்பாளர் அருண் சிதம்பரம் திருவாரூரில் இளைஞர் பட்டாளத்துடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

MNM candidate

By

Published : Apr 9, 2019, 4:24 PM IST

தமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவை வேட்பாளர் அருண் சிதம்பரம் இளைஞர்களுடன் சென்று நகர் பகுதியில் நரசிங்கபேட்டை, திலகர் தெரு, வாலவாய்க்கால், புலிவலம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்ததாவது:

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்
திருவாரூர் மாவட்டம் இல்லாது தமிழ்நாடு முழுவதுமே மக்கள் நலனே எங்கள் முதன்மை வாக்குறுதி. மேலும் திருவாரூர் மிகப்பெரிய ஆளுமைகளை கண்ட தொகுதி. ஆனாலும் இப்பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் கூட சரிவர மேற்கொள்ளப்படவில்லை. மழைகாலங்களில் மழை நீர் தேங்குதல் போன்ற முக்கிய பிரச்னைகளை மக்கள் சந்திக்கின்றனர். மக்கள் எப்போதும் பழைய கட்சிகளையும், ஒரே வேட்பாளர்களைக் கண்டும் சலித்துப் போயுள்ளனர். கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள் கூட எங்களைக் கண்டதும் தாமாக முன்வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பலத்த வரவேற்பு உள்ளது. ஆகவே நாங்கள் வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details