திருவாரூரில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகளின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். சுமார் ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழா, மே 6ஆம் தேதி தொடங்கப்பட்டது.
பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து இசையஞ்சலி - music
திருவாரூர்: சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
இசை திருவிழா
இந்த விழாவின் இறுதி நாளான இன்று, பிரசித்திப்பெற்ற தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.
விழாவின் இறுதியில், சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்தின கீர்த்தனைகளைப் பாடி, சங்கீத மும்மூர்த்திகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
Last Updated : May 11, 2019, 3:30 PM IST