தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் - Severe punishment

திருவாரூர்: பச்சிளம் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Sexual harassment requires severe punishment
Sexual harassment requires severe punishment

By

Published : Jul 11, 2020, 4:31 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் தகுந்த இடைவெளியை பின்பற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் உயிரிழப்பு குறித்து அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையான முறையில் நீதி வழங்க வேண்டும், தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்பவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அப்போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் பேருந்து கட்டணம், மின்சாரக் கட்டணம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பணம் கட்ட வற்புறுத்துவது போன்றவற்றை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்' - இயக்குநர் கௌதமன்

ABOUT THE AUTHOR

...view details