தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் வேதனை!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இரவு முதல் கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

By

Published : Feb 11, 2022, 11:16 AM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் வேதனை
திருவாரூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் வேதனை

திருவாரூர்:தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று (பிப்ரவரி 10)மாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு முழுவதும் குறிப்பாக நன்னிலம், வலங்கைமான், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, குடவாசல், மன்னார்குடி உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வந்ததால் சம்பா சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் தற்போது மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திடீரென பெய்த கனமழையால், நெற்பயிர்கள் முழுவதும் மழை நீரில் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

எனவே, ஈரப்பதம் கூடுதலாக இருந்தாலும் அனைத்து நெல்மூட்டைகளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் வேதனை...

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details