மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கச்சனம் கடைதெருவிலிருந்து திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் வரை பேரணியாகச் சென்றனர்.
பேரணியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பி 100க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பேரணியாகச் சென்றனர்.
மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி! - Agriculture act
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கச்சனத்தில் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
Agriculture act
இப்பேரணியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.